×

கார்கே, ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: மாநிலங்களவை தலைவர் ெஜகதீப் தன்கரை அவமதித்ததாக கூறி காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக பாஜ சிறப்பு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளது. லண்டனில் ராகுல் பேசிய விவகாரம் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ் கொடுத்தார். அதை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார்.

இதையடுத்து அவை தலைவர் தங்கள் கட்சி சார்பு விசுவாசத்தை காட்டக்கூடாது என்று கார்கே விமர்சனம் செய்தார். ஜெய்ராம் ரமேஷ் சியர் லீடர் போல் அவைத்தலைவர் செயல்படுவதாக கூறினார். இதையடுத்து இவர்கள் மீது பா.ஜ சார்பில் சிறப்பு உரிமை மீறல் நோட்டீஸ் அவைத்தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை உரிமைக்குழுவுக்கு அனுப்பலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக மாநிலங்களவை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கார்கே, ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Karke ,Jairam Ramesh ,New Delhi ,Congress ,Mallikarjun Kharge ,Rajya Sabha ,Speaker ,Ejagadeep Dhankar ,Kharge ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை...