×

பிரகாஷ்ராஜால் படப்பிடிப்பு நிறுத்தம்

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜால் விருமன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் தேனி சென்றிருந்த படக்குழுவினர் சென்னை திரும்பினர். குட்டிபுலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதில் கார்த்தி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். படத்துக்கு விருமன் என தலைப்பிட்டுள்ளனர். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமானார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை தேனியில் படமாக்க முத்தையா, ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் அங்கு சென்றுவிட்டனர். ஆனால் கால்ஷீட் கொடுத்தபடி தேனிக்கு பிரகாஷ்ராஜ் வரவில்லை. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, படக்குழுவினர் சென்னை திரும்பினர். பிரகாஷ்ராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம்.இதேபோல், ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் யானை. இந்த படத்திலும் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமானார். ஆனால் சொன்னபடி அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டனர். இப்போது அந்த வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்….

The post பிரகாஷ்ராஜால் படப்பிடிப்பு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Prakashraj Viruman ,theni ,chennai ,Kutibuli ,Komban ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...