ராகுல்காந்தி பதவி நீக்கம் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

காரைக்குடி: காரைகுடி மகர்நோன்பு திடல் காந்தி சிலையின் கீழ் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து சத்தியாகிரக அறவழி போராட்டம் நடந்தது. எம்எல்ஏ மாங்குடி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் எம்எல்ஏ கேஆர்.ராமசாமி துவக்கிவைத்தார். திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், துணைத்தலைவர் பிஎல்.காந்தி, நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தியாகராஜன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு பின்னர் எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளும் பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம் மற்றும் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ராகுல்காந்தியை கண்டு அஞ்சி இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது. சர்வாதிகார போக்கில் இந்த நடவடிக்கை எடுத்த பாஜக அரசை வண்மையாக கண்டிக்கிறோம். 11 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். விரைவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் வரும் என்றார்.

Related Stories: