பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு `கட்’

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து துண்டித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில் பொதுமக்கள் குடிநீர் கட்டணம், வீட்டுவரி, சொத்து வரி, காலி மனைவரி, தொழில்வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 5 கோடி ரூபாய் வரி வசூல் பாக்கி உள்ள நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் நகராட்சி ஆணையர் மூர்த்தி, மேலாளர் அன்புச்செல்வி, பொறியாளர் ராஜகோபாலன், மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உடனடியாக வரி செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிரடி வரி வசூல் செய்து வருகின்றனர். வரி இல்லா இனம், குத்தகை இனம் செலுத்த வேண்டியவற்றை தற்பொழுது நகராட்சி நிர்வாகம் அதிரடியாக தீவிர வசூலில் இறங்கி உள்ளனர். நேற்று சின்ன வளையம் மற்றும் கீழ குடியிருப்பு பகுதிகளில் வரி செலுத்தாதவர்களின் 18 பேருடைய குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் இதுபற்றி நகராட்சி ஆணையர் கூறும்போது, வரி செலுத்த தவறுவோர் மீது ஜப்தி நடவடிக்கை குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: