×

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 21: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் காஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் மாவட்ட செயலாளர்கள் கௌரி தலைமையில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளை வைத்தும் விறகடுப்பு மண்பானைச் சட்டி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வருக மக்களை நசுக்கும் வகையில் சமையல் எரிவாயு உருளை விலை அதிகமாக உயர்ந்து கொண்டே போவது மற்றும் பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை தற்போது வரை கண்டுகொள்ளாத மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மாதர் சம்மேளன தேனி மாவட்ட கிளை சார்பில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாதர் சம்மேளனத்தின் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் கவுரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சமையல் காஸ் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் காலி காஸ் சிலிண்டரை எடுத்து வந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சார்பில் தேனி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Theni Collector ,
× RELATED ஓபிஎஸ், டிடிவி உள்பட 5 வேட்பாளர்கள் மீது வழக்கு