×
Saravana Stores

ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஜூலை 16: தேனி மாவட்டம், கம்பம் அருகே ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஊத்துக்காடு பகுதியில் கடந்த 100 ஆண்டுகளாக விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்து முள்வேளி அமைத்துள்ளதை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்துவோரை மிரட்டி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கோரிக்கை மனுவினை கிராம மக்கள் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர்.

The post ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Uthukkadu ,Kambam, Theni ,Theni Collector ,Oothukkadu ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கங்களில் இன்று கடன் மேளா முகாம்