×

பிளஸ் 1 பொதுத்தேர்வு கொடுமுடியில் 279 மாணவர்கள் எழுதினர்

கொடுமுடி: பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதில் கொடுமுடி தேர்வு மையத்தில் 279 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.   கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 39 பேர், ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 51 பேர், மற்றும் அரசு நிதி உதவி பெறும் கொடுமுடி தனியார் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகள் 189 பேர் என மாணவர்கள் 133 பேர் மற்றும் மாணவிகள் 146 பேர் உட்பட மொத்தம் 279 பேர் தேர்வு எழுதினர்.  மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவைகளை எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனர்.  தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அறைக்கண்காணிப்பாளர்களாக ஆசிரியை, ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். தேர்வில் முறைகேடு, ஒழுங்கீன நடவடிக்கைகளை தடுக்கும் பணியில் பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டிருந்தனர். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags :
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது