திருச்செங்கோடு, மார்ச் 10: வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் சர்வதேச பெண்கள் தினவிழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தலைவர் பழனியப்பன், துணைத்தலைவர் சரஸ்வதி அம்மாள் மற்றும் செயலாளர் கவிதா செந்தில்குமார், முதல்வர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் உழவர் ஆனந்த் நிறுவனத்தின் யமுனா ஆனந்த், நிறுவனர் உழவர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலாமாண்டு முதுகலை ஆங்கிலத்துறை மாணவி மதுபாலா வரவேற்றார். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்கள், சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வுடன் இருத்தல், பெண்ணியம் போற்றும் அளவுக்கு கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர் பேசினார். தொடந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. குறும்படம் திரையிடப்பட்டது. ...
