ஈரோடு: மகளிர் தினத்தை முன்னிட்டு ஈரோடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று கேக் வெட்டி விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினம் நேற்று சர்வதேச அளவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதை முன்னிட்டு ஈரோடு மாநகர் மகிளா காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இதைத்தொடர்ந்து, அனைவரும் பரஸ்பரம் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.
