×

தா.பேட்டை அருகே பள்ளி தலைமையாசிரியரை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

தொட்டியம்: தா.பேட்டை அருகே , தலைமையாசிரியரை மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பாப்பபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நேற்று இந்த பள்ளியில் செய்முறை தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஜடமங்கலத்தை சேர்ந்த முகேஷ்(22), ரகுபதி(24) ஆகிய இருவரும் பள்ளி வளாகத்தில் கூச்சலிட்டு கொண்டு டூவீலரில் அதிக ஒலி எழுப்பி பள்ளியில் வளாக பகுதியில் சுற்றி வந்துள்ளனர். அப்போது மாணவிகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் தட்டிக் கேட்டதற்கு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

இதைக் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் மற்றும் ஆசிரியர்கள் நேரில் சென்று கேட்டதற்கு அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கட்டையை எடுத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் சந்திரமோகன், தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்தையன், எஸ்ஐ குமரேசன் ஆகியோர் இளைஞர்கள் முகேஷ், ரகுபதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tha. Pettai ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...