×

செங்கல்பட்டில் பெருமாள் கோயிலில் மாசி மாத திருவிழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் உள்ள, பெருமாள் கோயிலில் மாசி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த  பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவ விழா நேற்று நடைபெற்றது. கடந்த 4ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளது. முதல் ஐந்து நாட்கள் தெப்ப உற்சவமும், அடுத்த ஐந்து நாட்கள் தவன உற்சவமும் நடைபெறவுள்ளது.  

முதல் நாளான‌ நேற்று‌ ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் முரளி கண்ணன் அலங்காரத்தில் சாமி ஊர்வலம்  துவங்கி கோயில் அருகே உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மின் அலங்காரத்தில் ஜொலித்த குளத்தில் பெருமாள் தெப்பத்தில் மக்களுக்கு அருள் பாலித்தார். இதன் தொடர்ச்சியாக நான்கு வீதிகளில் பெருமாள் ஊர்வலம் நடைபெற்றது. மாசி மாத முதல் நாள் தெப்ப விழாவில், சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.

Tags : Masi month festival ,Perumal Temple ,Chengalpattu ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...