×

வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா

மோகனூர்: மோகனூர் வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி, 2 ஆயிரம் ஆடுகள் வெட்டி விருந்து வழங்கப்பட்டது. மோகனூரில் வள்ளியம்மன் கோயில் உள்ளது. கொங்கு குலாளர் கிழங்கு நாடு 3 அண்ணன்மார்களுக்கு பாத்தியப்பட்ட  இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறும். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பொங்கல் விழா நடைபெற்றன. பூ மிதித்தல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தல், பிறந்த வீட்டு பிள்ளைகள் வீட்டு அழைப்பு, மாமன்மார்களுக்கு மாலை மரியாதை செய்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் பங்கேற்றனர். நிறைவாக கிடா வெட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 2000 ஆடுகள் வெட்டி உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விருந்து அளித்தனர்.

Tags : Valliamman Temple Pongal Festival ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்