×

மாவட்ட விளையாட்டு மையத்தில் சைக்ளிங் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாவட்ட விளையாட்டு மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்குட்பட்ட சைக்ளிங் வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர்  குறைந்தது ஐந்து ஆண்டுகள் செங்கல்பட்டு  மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சைக்ளிங் விளையாட்டில் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய  பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயற்சி கட்டணமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானது. இதற்குரிய விண்ணப்பத்தை செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 6ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். எனவே செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த  சைக்ளிங்  விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதற்கு விண்ணப்பித்து  பயன்பெறலாம்.

Tags : District Sports Center ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...