×

கமாண்டர் கர்னல் சுனில் பட் கோப்பை வழங்கினார் மணப்பாறையில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்கள் பறிமுதல்

மணப்பாறை, மார்ச் 2: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியே செல்லும் வாகனங்களில் உரிய ஆவணங்கள் பற்றியும் , வாகனத்தின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணப்பாறையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அதிக பாரம் ஏற்றி கொண்டு அதிவேகமாக சென்ற லாரியை மடக்கி பிடித்து ஆவணங்களை சரிபார்த்த போது லாரியின் தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதேபோன்று மணப்பாறையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த ஈச்சர் வாகனத்தையும் பிடித்து ஆவணங்களை சரிபார்த்த போது அனுமதி சீட்டு (பர்மிட்) இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதுபோன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ற சரக்கு லாரி, ஈச்சர் லாரி, மற்றும் ஒரு சுற்றுலா பஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : Commander ,Colonel Sunil ,
× RELATED இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது