×

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 700 இடங்களில் கொண்டாட்டம்

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 700 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது என செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள், முதியோருக்கு உணவு வழங்க வேண்டும். புதிய கொடி கம்பங்கள் அமைத்து, கட்சி கொடியேற்ற வேண்டும். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்க வேண்டும்.

ஒருமாத காலம் தொடர்ச்சியாக தலைவர் பிறந்த தினத்தை கட்சியினர் கொண்டாட வேண்டும். மாவட்டத்தில் 700 இடங்களில் பிறந்தநாள் விழாக்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு நலத உதவிகள் வழங்க ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. சுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் ராணி, நலங்கிள்ளி, பொருளாளர் பாலசந்திரன், மாநில நிர்வாகி வழக்கறிஞர் நக்கீரன், கைலாசம், ஆனந்தகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், பொதுக்குழு உறுப்பினர் விமலா சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுவாமி, ஜெகநாதன், கவுதம், துரைசாமி, பாலசுப்ரமணியம், அசோக்குமார், நவலடி, செந்தில்குமார், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவகுமார், நகர்மன்ற தலைவர்கள் கவிதாசங்கர், கலாநிதி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், மீனவர் அணி சுகுமார், இளைஞர் அணி நிர்வாகிகள் நந்தகுமார், இளம்பரிதி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்.சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதன்சந்தையில் இறைச்சி மாடுகள் விலை உயர்ந்தது சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் நேற்று கூடிய சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவிலான மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள், உள்ளூர் சுற்றுப்பகுதியில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சந்தையில் இறைச்சி மாடுகள் விலை உயர்ந்தது. இறைச்சி மாடுகள் ₹25 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹47 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ₹14 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ₹2.25 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags : Namakkal East District ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்