×

நீலகிரி எம்.பி. ராசா ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார்

மேட்டுப்பாளையம்: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்னூர் பகுதியில் உள்ள கணுவக்கரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டுமென நீலகிரி எம்பி ஆ.ராசாவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.  இந்நிலையில் நேற்று நீலகிரி செல்வதற்காக மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகம் வந்த ஆ.ராசா,தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் அன்பளிப்பாக கொடுத்த புத்தகங்களை சேர்த்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை கார்முகில் நூலகம் என்ற பெயரில் இளைஞர்களால் துவங்கப்பட்ட நூலகத்திற்கு  வழங்கினார். இதனை நூலக தலைவர் மோகனிடம் பெற்றுக் கொண்டார். அப்போது, அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஜாஹீர் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Nilgiri M. GP Rasa ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது