×

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், நாளை (28ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகிக்கிறார்.

கூட்டத்தில் வரும் 1ம் தேதி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா, கிழக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், வரும் 3ம்தேதி இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாமக்கல் வருகை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


எனவே, இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி., தெரிவித்துள்ளார்.


Tags : Namakkal ,East District ,DMK ,Working ,Committee Meeting ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்