×

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி, பிப்.25: சூளகிரி ஒன்றியம் நெரிகம் கிராமத்தில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல்,

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதேபோல், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், பிற அமைச்சர்கள், கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags : Tamil Nadu Government Achievement Photo Exhibition ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை