×

சிங்காரப்பேட்டையில் மது விற்ற 3 பேர் கைது

ஊத்தங்கரை, பிப்.25: சிங்காரப்பேட்டை அருகே எட்டிப்பட்டி பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கூடுதல் விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த ராதா(56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கல்லாவி போலீசார் ரோந்து சென்றபோது அம்மன் கோயில்பதி பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ்(52), லட்சுமி(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Singarapet ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது