×

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் டிஐஜி தகவல் மாநில எல்லை சோதனைச்சாவடியில்

குடியாத்தம், பிப்.22: மாநில எல்லை சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காந்திநகரில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 1997ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரை நிலுவை வழக்குகள் குறித்து டிஎஸ்பி ராமமூர்த்தியிடம் கேட்டறிந்தார். வழிப்பறி, திருட்டு, கொலை உள்ளிட்ட 10 வழக்குகளில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் உள்ளது. இதனை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் சரகத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மாநில எல்லைகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 4 போலீசார் சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர். மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களுக்கு காவல்துறையின் இலவச கைப்பேசி எண், இமெயில் போலீசாரால் வழங்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்ந்து நடத்தப்படுகிறது. மேலும், சாலை விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு, சாலை சீரமைப்பு, போக்குவரத்து சிக்னல் விளக்கு பொருத்தம் செய்யப்பட்ட வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : DIG ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...