×

இணையதளத்தில் விண்ணப்பக்கலாம் குரும்பலூரில் நள்ளிரவில் குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்

பெரம்பலூர்: குரும்ப லூரில் நள்ளிரவில் தீப்பிடித்து குடிசைவீடு எரிந்ததால் குடும்பத்தினர் அலறியடித் து வெளியேறினர். மின்கசிவு காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பேரூராட்சி 11 வது வார்டு, அரசு மேல்நி லைப்பள்ளி பின்புறம் தோ ப்புத் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன்(49). இவரது மனைவி லீலாவதி (46). இவர்களுக்கு ஜெகதீ ஸ்வரி, பிரிய தர்ஷிணி, பிரியா ரமணி, ரவீணா ஆகிய 4பிள்ளைகள். இதில் ஜெகதீஸ்வரிக்கு மட்டும் திருமணமாகிவிட்ட நிலை யில் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் 3பிள்ளை களுடன் தனது குடிசை வீட் டில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (20ம் தேதி) இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரு ம் வீட்டில் தூங்கிக் கொண் டிருந்தனர். நள்ளிரவு 12ம ணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை பற்றி எரிந்துகொண்டிருந்தது. இத னைப் பார்த்து அலறியடி த்தபடி அனைவரும் கூச்ச லிட்டவாறு எழுந்து வெளி யே ஓடிவந்தனர். வீடு எரிவ தைப் பார்த்து அக்கம்பக்கத் து வீட்டார்கள் உதவியுடன் தீயைப் போராடி அணைத் தனர். இருந்தும் வீட்டிலிரு ந்த கட்டில், பீரோ, கிரைண் டர், மிக்சி, டிவி, செல்போன் உள்ளிட்ட ரூ50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ரூ10 ஆயிரம் ரொக்கப் பணம், துணிகள், பிள்ளைகள் பிரியாரமணி, ரவீணாஆகியோரது பாடப் புத்தகங்கள் அ னைத்தும் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தீவிபத்துக்கு மின்கசி வுக் காரணமாக இருக்க லாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து குரும்பலூர் தெற்கு விஏஓ செல்வி கொடுத்தத் தகவலின்படி பெரம்பலூர் தாசில்தார் கி ருஷ்ணராஜ் நிவாரண உத விகளுக்கான ஏற்பாடுக ளைச் செய்துவருகிறார். நள்ளிரவில் குடிசைவீடு தீப் பிடித்து எரிந்த சம்பவம் தோப்புத் தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது குறிப்பிடத் தக்கது.

Tags : Kurumbalur ,
× RELATED குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர்...