×

வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சிதம்பரம், செப். 3:  சிதம்பரம் திரவுபதியம்மன் கோயில் வளாகத்தில் தனி சன்னதியாக வீற்றுள்ள வளம் தரும் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் காய்கறி மற்றும் மஞ்சள், பணம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகியும், மூத்த நகரமன்ற உறுப்பினருமான ரமேஷ்,  ஆலய அர்ச்கர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இதில் சர்வ சக்தி பீடம் தில்லை சீனு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Varagi ,
× RELATED ஏன் எதற்கு எப்படி?