×

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு

சேந்தமங்கலம், ஜூலை 27: கேரளா வியாபாரிகள் வராததால், புதன்சந்தையில் நேற்று மாடுகள் விலை குறைந்தது. புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கும் சந்தை, செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். நேற்று கூடிய சந்தைக்கு குறைந்த அளவிலான  மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. தவிர, கேரளாவில் புராண மாதம் தொடங்கி உள்ளதால், மக்களிடையே இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் கேரள மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது. இறைச்சி மாடு ₹20 ஆயிரத்திற்கும், கறவை மாடு ₹44 ஆயிரத்திற்கும், கன்று குட்டி ₹10 ஆயிரத்திற்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ₹2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பிரதான தொழிலாக உள்ளது. தவிர, கிராமப்புற பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்தும் வருகின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் பன்றிகள் சாலைகளில் சுற்றித்திரிவும், சாக்கடைகளில் படுத்து கிடக்கின்றன.
சாலையை கடக்கும் போது அவ்வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு பன்றிகள் இறந்து போகின்றன. எனவே, பன்றி வளர்ப்போர் பட்டியில் அடைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் மர்மநோய் தாக்கி அடுத்தடுத்து 45 பன்றிகள் உயிரிழந்துள்ளன.இவற்றை தூய்மை பணியாளர்கள் தூக்கிச்சென்று புதைத்து வருகின்றனர். கேரளா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியதால் பண்ணையில் உள்ள பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் நாமகிரிப்பேட்டை பகுதியில், மர்மநோய் தாக்கி பன்றிகள் உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். கால்நடை நோய் புலனாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, எதனால் பன்றிகள் இறந்தது என கண்டறிய வேண்டும். ஆர்டிஓ தலையிட்டு பன்றிகளை பட்டியில் வைத்து வளர்க்க உத்தரவிட வேண்டும் என பொதமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Namakirippet, Namakkal District ,
× RELATED நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்