×

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம் ஜூன் 2: ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்றவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன்(28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் தா.பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற மணிகண்டன் 14 வயது சிறுமியை போனில் வரவழைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார். சிறுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் இருப்பவர்கள் ஓடி வந்து சிறுமியை காப்பாற்றினர். பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது மணிகண்டன் தன்னை தவறாக நடப்பதற்கு கடத்திச் செல்ல முயற்சித்தார் என அவர் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Jayankondam ,Pokcho ,
× RELATED செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்