×

இடைப்பாடியில் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் தேரோட்டம்

இடைப்பாடி, ஏப்.20: இடைப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் பிரசித்தி பெற்ற பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் தேவகிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 16ம் தேதி தொடங்கி நான்கு நாட்களாக நகரின் முக்கிய வீதி வழியாக சுற்றி நேற்று காலை கோயிலை அடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில், செயல் அலுவலர் கோகிலா, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மாதையன், வடிவேலு, தங்கவேலு, சிங்காரவேலு, மணி, ரவி, கதிர்வேல், செந்தில்குமார், ராஜமாணிக்கம், ரமேஷ், ராஜ், பாலசுப்பிரமணி மற்றும் ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் தேரை ஊர் பொதுமக்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வடம்பிடித்து இழுத்து வந்து கோயிலை அடைந்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சத்தாபரணம், புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நகர்மன்ற தலைவர் பாஷா, நாடார் மகாஜன  சமுதாயத்தினர் முன்னிலையில் நடந்தது. இன்று(20ம் தேதி) காலை நடராஜர் அபிஷேக தரிசனத்தை தொடர்ந்து, மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags : Nanjundeswarar Temple ,
× RELATED நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்