×

கோபிநாதம்பட்டியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அரூர். ஏப்.12: அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர்பந்தல் திறப்பு விழா நடந்தது. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சௌந்தரராசு தலைமை வகித்து, தண்ணீர்பந்தலை துவக்கி வைத்தார். தர்பூசணி, நீர்மோர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொறுப்பாளர்கள் சரவணன், திருமால்செல்வன், சுரேஷ்குமார் பூங்கொடி, ராஜேந்திரன், மணிமாறன், கீரை அமுதா சங்கர், பழனி, ரத்தினம், அண்ணாதுரை, தென்னரசு, சுரேஷ்குமார், கார்த்திக்ராஜா, சின்னசாமி, விங், சுப்பிரமணியம், ஜோதிமணி, சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Gopinathampatti ,
× RELATED விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள்...