×

மகாதானபுரத்தில் விபத்து லாரி- அரசு பேருந்து- வேன் மோதல்

கிருஷ்ணராயபுரம், ஏப்2:கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரத்தில் டேங்கர் லாரி -அரசு பஸ் -தாய் சேய் நல வேன் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் 7பேர் படுகாயம் அடைந்தனர். மும்பையைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் மகன் அகிலேஷ்குமார் (25 ).இவர் நேற்று முன்தினம் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி டேங்கர் லாரி ஒன்றை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.அப்போது அரசு பேருந்து ஒன்று திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற டேங்கர் லாரி திடீரென நின்றதால் அரசு பஸ் லாரி மீது மோதி நின்றது. பின்னால் வந்த தாய் சேய் நல வேன் பின்பக்கம் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த திருச்சி மண்ணச்சநல்லூர் சேர்ந்த சுந்தர்ராஜன் (55 ),மதுரையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன்( 32 ), திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரிமுத்து (51), திருச்சி பாலக்கரை சேர்ந்த பாத்திமாபீபி (55 ), பெட்டவாய்தலை சேர்ந்த லட்சுமி (49), குளித்தலை சேர்ந்த மாரியாயி( 55) மற்றும் தாய் சேய் நல வேன் டிரைவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சுலாசிங் (29) ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mahadanapuram ,
× RELATED குமரி அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு..!!