(தி.மலை) சாத்தனூர் அணை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு தடையின்றி தண்ணீர் வழங்க

திருவண்ணாமலை, மார்ச் 25: திருவண்ணாமலை நகராட்சிக்கு, சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சிக்கான தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த, சாத்தனூர் உலகலாபாடியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சியில் கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி, சாத்தனூர் அணை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் சு.ராஜாங்கம், ஆணையாளர் பார்த்தசாரதி உள்ளிட்ேடார் நேரில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, அணையில் நீர் இருப்பு, குடிநீர் சுத்திகரிப்பு முறை, குடிநீரை சுத்திகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்து, பொறியாளர் நீலேஷ்வர், உதவி பொறியாளர் ரவி ஆகியோர் விளக்கினர். மேலும், கோடை காலத்தில் தடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யதிருப்பதாக தெரிவித்தனர். அப்போது, நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகராட்சி முன்னாள் திமுக குழு தலைவர் குட்டி புகழேந்தி, கவுன்சிலர்கள் ஆ.பிரகாஷ், ம.செந்தில், க.பிரகாஷ், கணேசன், வக்கீல் கண்ணதாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: