×

150 கிலோ மிளகாய் கொண்டு மகா பிரத்தியங்கிரா சிறப்பு யாக பூஜை ஆரணி அரியாத்தம்மன் கோயிலில்

ஆரணி, ஏப்.25: ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் 150 கிலோ மிளகாய் கொண்டு மகா பிரத்தியங்கிரா சிறப்பு யாக பூஜை நடந்தது. ஆரணி டவுன் பழைய பஸ்நிலையம் அருகில் மிக பழமையான அரியாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு மகா பிரத்தியங்கிரா யாகம் மற்றும் சப்த மாதாக்களுக்கு சிறப்பு பூஜைகள் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. அப்போது, கோயில் வளாகத்தில் சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்ட மேடையில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு மகா பிரத்யங்கார யாகத்தில் சுமார் 150 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. மேலும், அக்னி குண்டத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் உருவம் காட்சியளித்தது. மேலும், பூஜை முடிந்ததும் புனித நீர் கொண்டு வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா அலங்காரமும், மகா தீபாராதனையுடன் நடந்து. தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த யாகபூஜையில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post 150 கிலோ மிளகாய் கொண்டு மகா பிரத்தியங்கிரா சிறப்பு யாக பூஜை ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Arani Ariyathamman ,Arani ,Maha Prathyangira ,Arani Ariyathamman temple ,Arani Town Old Bus Stand ,Ariyathamman Temple ,Chitra Pournami festival ,Maha ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு