×

வேப்பனஹள்ளி, சூளகிரியில்

2வது நாளாக பெய்த மழைவேப்பனஹள்ளி, மார்ச் 22:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வானில் கருமேகங்கள் திரண்டு வந்து திடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பகல் மற்றும் இரவு நேரத்தில் வீசிய அனல் காற்று தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையும் திடீரென மழை பெய்தது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

சூளகிரி: சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால், வனப்பகுதி மற்றும் வனப்பகுதி ஒட்டிய நிலங்களில் மரம், செடிகள் காய்ந்து போனது. மேய்ச்சல் நிலங்கள் முற்றிலுமாக காய்ந்து போனதால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை சூளகிரி, பேரிகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Vepanahalli ,Solagiri ,
× RELATED வெள்ளப்பெருக்கில் சாலை அடித்து...