×

பெண்ணாடம் பேரூராட்சியில் விசிக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

பெண்ணாடம், மார்ச் 5: பெண்ணாடம் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி விசிக வேட்பாளராக அமுத லட்சுமி ஆற்றலரசு நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அமுதலட்சுமி பெண்ணாடம் பேரூராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.பெண்ணாடம் பேரூராட்சி துணைத் தலைவராக திமுக நகர செயலாளர் குமரவேல் அறிவிக்கப்பட்டு இருந்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் குமரவேல் பெண்ணாடம் பேரூராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவருக்கும் தேர்தல் அலுவலர் பாஸ்கரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


Tags : Vizika ,Feminist Municipality ,
× RELATED நீட் தேர்வு ரத்து..பழங்குடியினருக்கு...