×

நீட் தேர்வு ரத்து..பழங்குடியினருக்கு தனிப்பட்டா..ஆவணக் கொலை தடுக்க தனிச் சட்டம்: விசிக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டபுரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். தேர்தல் அறிக்கையில்,

விசிக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்:

* தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது.

* ஆளுநர் பதவியை நீக்க மத்திய அரசுக்கு விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

* அம்பேத்கர் பிறந்த நாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்.

* மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த விசிக தொடர்ந்து வலியுறுத்தும்.

* பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் வி.சி.க. துணை நிற்கும்.

* பாசிச சக்திகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விசிக வலிமையான குரல் எழுப்பும்.

* இந்துத்துவ திணிப்பால் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்துத்துவ சக்தியால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை வி.சி.க மேற்கொள்ளும்.

* காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக்கூடாது என்பதில் வி.சி.க. உறுதியாக உள்ளது.

* ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த விசிக வலியுறுத்தும்.

* தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவுவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை விசிக வலியுறுத்தும்.

* கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக பாடுபடும்.

* ஒன்றிய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

* பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக்குழுவையும் உருவாக்க வேண்டும்.

* வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்களை நீக்க விசிக வலியுறுத்தும்.

* சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்ட திருத்தங்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

* ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆணைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம்.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்.

* தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து .

* 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்தவும், நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த கோரிக்கை.

* ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்.

* மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு

அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள்

* தொகுதிமறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு

* தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்

* இந்தி எதிர்ப்பு

* இந்திய மொழிகள் பல அமைச்சகம்

* தேசிய இனங்கள் கவுன்சில்

* இந்திய மொழிகள் வளர்ச்சி ஆணையம்

* இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம்

* வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல்

* விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம்

* விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்

* GST வரி ஒழிப்பு

* வருமான வரி சீரமைப்பு

* விவசாயக் கடன் ரத்து

* விவசாயத்திற்கு தனி பட்ஜெட்

* பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு

* ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிப்பு

* தனியார்மயதலை கைவிடல்

* நீதித்துறையில் இட ஒதுக்கீடு

* தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு

* சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு

* உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து

* அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை

* மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல்

* இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல்

* மாநில சுயாட்சி

* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை

* மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

* வழக்காடு மொழியாக தமிழ்

* தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல்

* தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி

* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்

* கோதவரி- காவிரி இணைப்புத் திட்டம்

* அணுமின் நிலையங்களை மூடுதல்

* வேலி காத்தான் ஒழிப்பு

* இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்தல்

* தமிழ்நாட்டின் பொருளாதார தலைநகராக தூத்துக்குடி

* இட ஒதுக்கீடு பாதுகாப்பு

* அமைச்சரவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு

* பழங்குடியினருக்கு தனிப்பட்டா

* தலித் கிருத்தவர்களை பட்டியலில் இணைத்தல்

* பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு

* மீனவர்களுக்கு தனி அமைச்சகம்

* மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம்

* மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம்

* நீட் தேர்வு ரத்து

The post நீட் தேர்வு ரத்து..பழங்குடியினருக்கு தனிப்பட்டா..ஆவணக் கொலை தடுக்க தனிச் சட்டம்: விசிக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Liberation Leopard Party ,People's Elections ,JAYANGONDAPURAM ,VICE- ,PRESIDENT ,THIRUMAWALAVAN ,Minister ,M. R. K. ,VISICA ,Report ,University of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...