×

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மாசி மக பெரிய தேரோட்டம்

மேச்சேரி, பிப்.17: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசிமக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தேரோட்ட திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் சின்ன தேரோட்டம் நடைபெற்றுது. நேற்று கோயில் வளாகத்திலிருந்து முதலில் விநாயகர் தேர் செல்ல அதன் பின்னால், பெரியதேர் பின் தொடர்ந்து சென்றது. கிழக்கு கோபுரம், சந்தப்பேட்டை, விஏஓ அலுவலகம், எதிரே பெரிய தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று விஏஓ அலுவலகத்திலிருந்து தேர் கோயில் நிலையை சென்றடையும். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Tags : Mecheri Bhadrakaliamman Temple ,Therottam ,
× RELATED ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்