×

ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்மாபுரம் வாய்க்காலை தூர்வார வேண்டும்

கம்மாபுரம், பிப். 8:        வி.குமாரமங்கலம் மணிமுக்தாற்றின் வடக்கு பிரதான பாசன வாய்க்கால், வி.குமாரமங்கலத்தில் இருந்து விளக்கப்பாடி வழியாக செல்கிறது. அதில் செடி, கொடிகள் மண்டி தூர்ந்துள்ளது. இதனால், மணிமுக்தாற்றில் அதிகளவு தண்ணீர் வந்ததால், விளைநிலங்களை பாதித்தது. விவசாயிகள் கோரிக்கையையேற்று, தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிதி ஒதுக்கீடு செய்து, வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது. ஆனால், அதில், சு.கீனனூரிலிருந்து கம்மாபுரம், வி.சாத்தப்பாடி வரை செல்லும் 2 கி.மீ., தூரம் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாராமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

 இதனால், 3 ஆண்டுகளுக்கு முன்னால் பெய்த கனமழைக்கு, என்.எல்.சி., வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களில் மழைநீர் தேங்கி, நெற்பயிர்கள் அழுகின. மேலும், அதிமுக அரசின் திட்டமான வாய்க்கால் தூர்வாரும் பணி சரியாக செயல்படவில்லை. இதன் காரணமாக நெல் சாகுபடி விவசாயிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஊராட்சி தலைவர்களும் செய்யவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து கம்மாபுரம் ஊராட்சித் தலைவர் வளர்மதி ராஜசேகரன் மற்றும் விவசாயிகள் சார்பில், மணிமுக்தாற்றின் வடக்கு பிரதான பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டுமென பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. எனவே வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kammapuram ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...