×

தர்மபுரியில் சீசன் துவக்கம்; கொய்யா கிலோ ₹60க்கு விற்பனை

தர்மபுரி: தர்மபுரியில், கொய்யா சீசன் துவங்கியுள்ளதால் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொய்யா பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 200 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது, அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருவதால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரியில் துரைசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, சித்தவீரப்ப செட்டி தெரு, சந்தைப்பேட்டை, கந்தசாமி வாத்தியார் தெரு, பஸ்நிலையங்களில் தள்ளுவண்டிகளில் கொய்யா விற்பனை சூடுபிடித்துள்ளது. சிறு வியாபாரிகள் கொய்யாவை தரம் பிரித்து, ஒருகிலோ கொய்யா ₹40 முதல் ₹60 வரை விற்பனை செய்கின்றனர். மருத்துவ குணம் கொண்ட கொய்யாவை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Tags : Darmapuri ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...