×

விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சிமொழி பயிலரங்கம் துவக்கம்

பெரம்பலூர், ஜன.29: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் 27, 28 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இப்பயிலரங்கத்தில் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (27ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி கலந்து கொண்டு பயிலரங்கத்தை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழ்மொழி தொன்மையான மூத்த மொழியாகும். தமிழக அரசின் ஆட்சி மொழியான தமிழ்மொழியில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

அலுவலகப் பணிகளில் தமிழ்மொழி பயன்படுத்துவது குறித்து ஏற்படும் சந்தேகங்களை போக்கவும், அனைத்து கோப்புகளும் தமிழ் மொழியிலேயே கையாளவும் இதுபோன்ற பயிற்சிகள் மிகவும் உபயோகமாக இருக்கும். இப்பயிற்சியில் பங்கேற்று உள்ள அலுவலர்கள் இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அலுவலர்கள் தங்களது இல்லங்களிலும் தங்களது குழந்தைகளுக்கும் தமிழ் மொழியின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags : Chittamalli ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நாற்றுக்கள் தயார்