×

2ம்தேதி நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

நாமக்கல்: நாமக்கல்லில் 2ம்தேதி நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து  கொள்கிறார். இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏவின் முயற்சியால், 1 லட்சத்து 8 வடைமாலை ஆஞ்சநேயருக்கு சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், அதிகாலை 5 மணிக்கு கலந்து கொள்ள உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மின்னாம்பள்ளி நைனாமலை வருதராஜ பெருமாள் தகோயிலுக்கு மலைப்பாதை அமைக்கும் பணியை ராமலிங்கம் எம்எல்ஏ வலியுறுத்தியன் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிதி ஒதிக்கீடு செய்து கொடுத்துள்ளார்.
அதன் மூலம் மலைப்பாதை அமைக்கும் பணி துவங்க இருக்கிறது. இந்த பணியை அன்று காலை 7 மணிக்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து ராசிபுரம்  கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், காலை 9.30 மணியளவில் பொன் வருதராஜ பெருமாள் கோயலில் திருப்பணிகளை அமைச்சர் பார்வையிடுகிறார். இவ்வாறு ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Sekar Babu ,Anjaneyar Jayanti ,2nd ,Rajeshkumar ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...