×

வேப்பூர் கல்வியாளருக்கு இந்தியன் ஐகான் விருது

 
வேப்பூர், டிச. 30: வேப்பூரில் செயல்பட்டு வரும் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தங்கதுரை, தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவராக உள்ளார். இவரது சமூக சேவையை பாராட்டி புதுடெல்லியில் தேசிய மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் டாக்டர் தங்கதுரைக்கு இந்தியன் ஐகான்-2021 விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், அருணாச்சல பிரதேச இளைஞர் நலத்துறை அமைச்சர் மாமாநட்டாங், டாக்டர் பீம் ராவ் ராமி அம்பேத்கர் பல்கலைக்கழக வேந்தர் வினெய் கபூர் பேஹரா, மத்திய புள்ளியியல் துறை இயக்குனர் சங்கராலால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சுரேஷ்குமார், தமிழக போக்குவரத்து துறை இணை இயக்குனர் ஜெயசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Veppur ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான்...