அரசு ஆண்கள் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி, டிச.10: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி. விஜயராகவன் தலைமை வகித்து பேசுகையில், ‘போதை பழக்கத்தால் சமூகத்தில் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கினார். மேலும், வளரும் பருவத்திலுள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது. போதை பழக்கத்திற்கு எதிராக போராட வேண்டும். விளையாட்டு, கல்வி, மற்றும் சமூக செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்.ஐ., சிவசந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன், உதவித் தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியர்கள் பத்மாவதி, ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: