×

வடுவூர் அருகே கதண்டு கடித்து 3 பேர் படுகாயம்

மன்னார்குடி, டிச.2: வடுவூர் அருகே கதண்டுகள் கடித்ததில் ஒரு பெண் உள்பட 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே கருவாக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் (50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான வய லில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் மரவள்ளி செடிகளில் உள்ள குச்சிகளை பறிக்கும் பணியில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த 7க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.அப்போது வயலின் அருகில் உள்ள தென்னை மரத்தில் இருந்து ஏராளமான கதண்டுகள் விவசாய தொழிலாளர்களை நோக்கி பறந்து வந்தன. இதனை எதிர்பாராத அவர்கள் தப்பியோடினர். அவர்களை விடாது துரத்தி கதண்டுகள் கடித்தன.

இதில் அதே கிராமத்தை சேர்ந்த சவுந்தர பாண்டியன் (69), மாரியப் பன் (59), வேணி (44) ஆகிய 3 விவசாய கூலி தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த குபேந்திரன் மற்றும் சக தொழிலாளர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கதண்டுகளை அளிப்பது தொடர்பாக குபேந்திரன் மற்றும் கிராம மக்கள் சார்பில் மன்னார்குடி தீயணைப்பு நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vaduvoor ,
× RELATED வடுவூரில் ஆலோசனை கூட்டம் நீர்நிலை...