×

வடுவூரில் ஆலோசனை கூட்டம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி அகற்ற வேண்டும்

மன்னார்குடி, ஜன. 5: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் பாகுபாடின்றி அகற்ற வேண்டும் என வடுவூரில் நடந்த தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க கூட்டத்தில் வலியுதப்பட்டது. விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் செய்ய வேண்டிய திட்டங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவாதிப்பதற்கான விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கத்தின் சார்பில் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் வடுவூரில் நேற்று நடைபெற்றது. முன்னோடி விவசாயி சிவா னந்தம் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் மாநில தலைவர் ராசபாலன், மாநில பொரு ளாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் ஜெயசங்கர், மாநில அமைப்பு செயலாளர் இளஞ்சேரன் உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் பாகுபாடின்றி அகற்ற வேண்டும். கனமழை யால் சேதமடைந்த சம்பா தாளடி நெற்பயிர் களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெறப்படும் சிட்டா அடங்கல் சான்று ஆண்டுக்கு ஒரு முறை பெற்றால் போதுமானது என உத்தரவிட வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலையின் நேரம், வேலை செய்யும் நபர்களின் திறன், பணியிடம், வேலைக்கான ஊதியம் என்கிற பகுத்தல் அடிப்படையில் திட்டத்தை அரசு நெறிப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். வடுவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பொது நீர் நிலைகளில் குடியிருப்போருக்கு பாதுகாப்பான மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோட்டூர் ஒன்றிய தலைவர் செல்வம் வரவேற்றார். நீடா ஒன்றிய அமைப்பாளர் வீரமணி நன்றி கூறினார்.

Tags : Vaduvoor ,
× RELATED வடுவூர் அருகே தூக்கில் சடலமாக தொங்கிய பெண்