கிருஷ்ணகிரி திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.15: கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், நகர திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர திமுக செயலாளர் நவாப் தலைமை வகித்து, அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர அவைத்தலைவர் தர்மன், நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, அஸ்லாம், திருமலைச்செல்வன், மாதவன், கடலரசுமூர்த்தி, கராமத், கனல் சுப்பிரமணி, சரவணன், சிறுமலர் ராஜசேகர், சேரன், ஜாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>