×

சித்தமல்லி நீர்தேக்க கரையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

தா.பழூர், ஏப்.9: சித்தமல்லி நீர்தேக்க கரையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சித்தமல்லி நீர்த்தேக்கம் திட்டம் உள்ளது. இந்த நீர் தேக்கத்தை சுற்றியுள்ள கரையின் இருபுறங்களிலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மழை காலங்களில் காலங்களில் நீர் வழிந்தோடி செல்வதற்கு வாய்க்கால் அமைக்கப்பட்ட போதிலும் கரையில் கருவேல முட்புதர்கள் மண்டி மண் அரிப்பு ஏற்பட்டு ஆங்கங்கே பள்ளமாக கிடைக்கின்றது. கரையில் மேற்பரப்பில் சாலை போல் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தி பூங்கா போல் காட்சியளித்து வந்தது. தற்போது மின்விளக்குகள் இன்றியும் சரளைக்கற்கள் பாதைகள் தெரியாத வண்ணம் கருவேல மரங்கள் மண்டி கிடைக்கின்றது. இதனால் கரைகளில் நடந்து செல்வது என்பது முடியாத காரியமாக உள்ளது. இந்த கரை அமைக்கும்போது, பூங்கா போன்றும் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ளவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தனர். நாளடைவில் மழைக்காலங்களில் அப்பகுதியில் கருவேல முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. மேலும் மழைக்காலங்களில் அதிகப்படியாக நீர் வழிந்து ஓடுவதால் கரையில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகி கிடந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமான காட்சியளிக்கிறது. அதுபோல் பொதுமக்கள் நீர்த்தேக்கத்தில் உள்ள நீரை பயன்படுத்துவதற்கும் ஏதுவாக கரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மண்டிக்கிடக்கும் முட்புதர்கள் காரணமாக நீர்த்தேக்கத்தில் உள்ள நீரை பயன்படுத்துவது என்பது முடியாத காரியமாகவும் மிகவும் சிரமமான தாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த நீர்தேக்கத்திற்கு அதிகப்படியான பறவைகள் வந்து செல்வதை இப்பகுதி மக்கள் பார்த்து வியந்து வருகின்றனர். இந்த நீர்த்தேக்கம் என்பது இப்பகுதி மக்களின் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

அரசு அதிகாரிகள் மரக்கன்று நட வேண்டும் என்று கூறி எங்கெங்கோ நட்டு வருகின்றனர். ஆனால் இது போன்ற ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் கரையில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தால் நிழலாகவும் சாலையில் செல்பவர்கள் அமர்ந்து சற்று நேரம் களைப்பை போக்கி செல்வார்கள். மேலும் நீரின் அருகே இருப்பதால் இதற்காக அதிகம் தண்ணீர் தேவை இல்லை.இந்த மரங்களால் குளிர்ந்த காற்றும் கிடைக்கும் ஆனால் அதுபோன்ற ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் இந்த கரையில் வெறும் கருவேல முட்புதருக்குள் மட்டுமே மண்டிக்கிடந்த வருகின்றன. எனவே துறை ரீதியான அதிகாரிகள் இந்த கருவேல முட்புதர்களை அகற்றி மரக்கன்றுகளை நட்டு இந்த நீர்த்தேக்கத்தின் கரையை பூங்கா போல் அமைத்து கரையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chittamalli Reservoir ,
× RELATED அரியலூர் மாவட்டம் சித்தமல்லி...