தேர்தல் தினத்தன்று ஸ்கூட்டரில் மது கடத்தல் பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது

ஈரோடு, ஏப். 8: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் தினத்தன்று ஸ்கூட்டரில் மது பாட்டில்களை கடத்தி விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில்  சிக்கியது.    ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலையொட்டி மாவட்டத்தில் அரசு டாஸ்மாக், தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மூலவாய்க்கால் நைநாம்பாளையம் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, ஸ்கூட்டரில் வந்த மர்மநபர் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். ஸ்கூட்டரை சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் புகாரின்பேரில், கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்கூட்டரையும், அதில் இருந்த 32 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>