சேலத்தில் 11 தொகுதிகளுக்கும் மின்னணு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு

சேலம், மார்ச் 31: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மின்னணு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில், 4280 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடிகளுக்கு 5,142 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்து தொகுதிக்கு ஏற்ப, வாக்குப்பதிவு இயந்திரங்கள்அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 22ம்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6 தொகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால்  அந்த தொகுதிகளுக்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், அவரது புகைப்படம், சின்னம் ஆகியன ஒரு சேர, பொருத்தப்பட்டு வருகிறது. அவற்றை சரிப்பார்க்க மாதிரி வாக்குப்பதிவு 11 தொகுதிகளில் தனித்தனியே நடந்தது. தொகுதிக்கான மொத்த வாக்குப்பதிவு இயந்திரத்தில், 5 சதவீதம் தேர்வு செய்து, ஒவ்வொரு இயந்திரத்திலும் தலா 1000மாதிரி வாக்குப்பதிவு செய்து சரிபார்க்கப்பட்டது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் கட்சி வேட்பாளர், அவர்களது முகவர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் (31ம்தேதி) மாதிரி வாக்குப்பதிவு நடக்கிறது.

Related Stories:

>