திமுக ஆட்சி அமைந்தவுடன் வீரக்கல்புதூரில் குடிநீர் தட்டுப்பாடு சீர் செய்யப்படும் வேட்பாளர் சீனிவாச பெருமாள் உறுதி

மேட்டூர், மார்ச் 30: மேட்டூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாள், வீரக்கல்புதூர் பேரூராட்சியில் ஹோட்டல்களில் புரோட்டோ மற்றும் தோசை சுட்டு, வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, நேற்று காலை குஞ்சாண்டியூர் பிரிவு சாலையில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் வீடு, வீடாக சென்று, வாக்கு சேகரித்தார். அப்போது வீரக்கல்புதூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூரில் உள்ள தொழிற்சாலைகளில் தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். புதுச்சாம்பள்ளி மயான பகுதியில் எரியூட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், அதனை சுகாதார முறையில் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். அவருடன் வீரக்கல்புதூர் பேரூர் செயலாளர் அல்லிமுத்து, துணை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி தமிழரசன், இளைஞர் அணி அமைப்பாளர் வினோத், பாரதி, ராஜாகண்ணு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>