×

மு.க. ஸ்டாலினை முதல்வராக அரியணையில் ஏற்றுவோம் வேட்பாளர் கதிரவனை ஆதரித்து முதன்மை செயலாளர் கே.என்.நேரு பிரசாரம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 30: மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் சிறுகாம்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது குடும்ப தலைவருக்கு மாதந்தோறும் ஆயிரம் உரிமைத் தொகை மற்றும் நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுவின் கடன்கள் தள்ளுபடி, சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கைகளை கூறி மு.க.ஸ்டாலினை முதல்வர் அரியணையில் ஏற்ற அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களித்து வேட்பாளர் கதிரவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், காட்டுக்குளம் கணேசன், ஒன்றிய சேர்மன் தர், துணை சேர்மன் செந்தில், மாதவப்பெருமாள்கோவில் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், நகர செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக சிறுகாம்பூர் மற்றும் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகர நிர்வாகிகள் நாகரத்தினம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் புஷ்பராஜ் ,சாந்தி மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர் டிடிசி சேரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Principal Secretary ,KN Nehru ,Kadiravan ,Stalin ,Chief Minister ,
× RELATED ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஜூன்...