×

காடுவெட்டி தியாகராஜனுக்கு ஆதரவாக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பிரசாரம்

தா.பேட்டை, மார்ச் 25: முசிறி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் தா.பேட்டை அருகே உள்ள கரிகாலி கிராமத்தில் நேற்று பிரசாரத்தை துவக்கினார். பிரசாரத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்று பேசியதாவது: கட்சிக்காக உழைக்க கூடியவர் காடுவெட்டி தியாகராஜன். தற்போது உங்கள் தொகுதி வளர்ச்சிக்காக உழைக்க காத்திருக்கிறார். முசிறி தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக என்றும் நான் உங்களுடன் இருப்பேன். அதேவேளை காடுவெட்டி தியாகராஜனை முசிறி தொகுதி எம்எல்ஏவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று காடுவெட்டி தியாகராஜன் வாக்குறுதி அளித்துள்ளார் .

அந்த வாக்குறுதியை செயலாற்ற வேண்டிய பொறுப்பு திமுக கழகத்தை சார்ந்தது என்றார். இதைதொடர்ந்து திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன், தா.பேட்டை ஒன்றியத்தில் வருங்காலத்தில் செய்ய திட்டமிட்டிருக்கும் பணிகள் குறித்து வாக்குறுதி அளித்து பேசினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கேஆர்.சேகரன், ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் கோட்டூர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்ட துணை செயலாளர் மயில்வாகணன், நகர செயலாளர்கள் தக்காளி தங்கராசு, சௌந்தர்ராஜன், நிர்வாகிகள் மெட்டல் மணி, கோவிந்தன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சிட்டிலரை சிவா, பிரபாகரன், மருதை, சாமி, ராஜசேகரன், செல்வம், கந்தசாமி உடனிருந்தனர்.

Tags : Principal Secretary ,KN Nehru ,Kaduvetti Thiagarajan ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு...