போச்சம்பள்ளி அருகே கோயில் கும்பாபிஷேக விழா

போச்சம்பள்ளி, மார்ச் 24: போச்சம்பள்ளி அருகே கந்தர்மலை வேல்முருகன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.போச்சம்பள்ளி அருகே ஆவத்துவாடி ஊராட்சி சுண்டாகப்பட்டி கிராமத்தில் கந்தர்மலை வேல்முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடந்தது. வரும் 27ம் தேதி  திருமஞ்சனம், கால வேள்வி 108 திரவியம், வேள்வி நிறைவு மற்றும், கோபுர விமானம் கலசம் நிறுவுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து 28ம் தேதி காலை காப்பு அணிவித்தல், 4ம் கால வேள்வி, நாடி சந்தனம், விநாகர் கோயிலில்  நன்னீராட்டு நடைபெறும். தொடர்ந்து 29ம் தேதி காலை 9 மணிக்கு கந்தர்மலை வேல்முருகனுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அக்னிகரகம் உள்ளிட்ட வைபவங்கள் நடக்கிறது. தொடர்ந்து மாலை மோட்டூர், சுண்டகாப்பட்டி முருகன், வள்ளி, தெய்வானை சுவாமி தேர் ஊர்வலம் மற்றும் முருகன் பெருமை என்ற சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்

Related Stories:

More