வேப்பனஹள்ளியில் வாகன தணிக்கை தீவிரம்

வேப்பனஹள்ளி, மார்ச் 24: சட்டமன்ற தேர்தலையொட்டி வேப்பனஹள்ளியில் வாகன தணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாகன தணிக்கையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. பறக்கும் படை அலுவலர்கள், போலீசார் ஒன்றிணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக வேப்பனஹள்ளியில் கூட்டுரோடு, பெங்களூரு சாலை, மாநில எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. முக்கிய இடங்களில் சோதனை செய்யும் அதிகாரிகள் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணம், பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று மாலை சரக்கு வாகனங்கள், கார் மற்றும் டூவீலர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது எவ்வித பணம், பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. வரும் 4ம் தேதி வரை கூடுதலாக சோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: